டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்
பொதுமக்கள் புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் ஊட்டத்தூர் சாலையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை கடந்த ஓராண்டுக்கு முன்பு பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஊத்தங்கால் அருகே டாஸ்மாக் கடை திறக்க முயற்சி செய்தனர். இதனால் கடை திறக்கும் பகுதியில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் ஊத்தங்கால் பகுதி பொதுமக்கள் புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாடாலூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் கடையை திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாடாலூர் போலீசார் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கடை திறப்பதை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடை மீண்டும் மாலையில் திறந்ததால் ஊத்தங்கால் பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், உடனடியாக கடை மூடப்பட்டது. மேலும் ஊத்தங்கால் பகுதி பொதுமக்கள் கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story