பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மனு
குளித்தலை பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரியிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
குளித்தலை,
குளித்தலை பகுதி இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர், அரசு போக்குவரத்து கழக குளித்தலை பணிமனை கிளை மேலாளர் ஜெயச்சந்திரனிடம் மனு ஒன்றை நேற்று அளித்தனர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:- திருச்சியில் இருந்து கரூர் வழியாகவும், கரூரில் இருந்து திருச்சி வழியாகவும் செல்லும் அரசு பஸ்கள் இரவு 10.30 மணி முதல், அதிகாலை 4.30 வரை குளித்தலை பஸ்நிலையம் வழியாக வந்து செல்லாமல், புறவழி தேசியநெடுஞ்சாலை வழியாக செல்கின்றன. இதனால் திருச்சி, கரூரில் இருந்து குளித்தலை வரும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் குளித்தலை செல்லும் பயணிகளை பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள் அவமரியாதையாக பேசுகின்றனர். எனவே திருச்சி மற்றும் கரூர் பஸ் நிலையங்களில் இருந்து குளித்தலை வழியாக செல்லும் அனைத்து அரசு பஸ்களும் குளித்தலை பஸ் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி புறவழி தேசியநெடுஞ்சாலையில் குளித்தலை பஸ்நிலையம் வந்து செல்லாத அரசு பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படும். மேலும், திருச்சி மற்றும் கரூர் பஸ் நிலையங்களில் இரவு நேரத்தில் பஸ்கள் இயக்குவது குறித்த அறிவிப்பு பலகை மற்றும் புகார் எண் வைக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story