கேரள போலீஸ் காவலில் களியக்காவிளை வாலிபர் மர்ம சாவு
கேரள போலீஸ் காவலில் வாலிபர் மர்மமாக இறந்தார். இதனால் அவரது உறவினர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
களியக்காவிளை,
குமரி மாவட்டம் களியக்காவிளை பழைய காளைசந்தை பகுதியை சேர்ந்தவர் சைமன். இவரது மகன் அனீஷ்(வயது 20). கூலி தொழிலாளி. இவர் தனது பெரியம்மா ஷீலாவுடன் வசித்து வந்தார்.
கடந்த 23-ந் தேதி காலையில் வேலைக்கு சென்ற அனீஷ் மாலையில் வீடு திரும்ப வில்லை. அவரை உறவினர்கள் வீடுகளில் தேடினர். அப்போது அனீசை களியக்காவிளை ஒற்றபனை விளையில் வைத்து கேரள போலீஸ் சீருடையில் வந்த 5 பேர் உள்பட 6 பேர் ஒரு காரில் கடத்தி சென்றதாக செல்வஞ்சேரியை சேர்ந்த சாமுவேல் தெரிவித்தார். மேலும் அந்த காரில் மலையாளத்தில் கேரள போலீஸ் என்று எழுதப்பட்டு இருந்ததாகவும் சாமுவேல் கூறினார்.
அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் ஷீலாவுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள், அனீசுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் சேர்த்துள்ளதாகவும், உடனே வருமாறும் கூறினர்.
இதனால் ஷீலா அதிர்ச்சி அடைந்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே மற்றொரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் அனீஷ் இறந்து விட்டதாகவும், உடனே வருமாறும் கூறினர்.
இதுபற்றி அவர்களது உறவினர்கள் விசாரித்தபோது அனீசை கேரள போலீசார் பிடித்து சென்றதும், போலீஸ் காவலில் வைத்து விசாரித்தபோது அவர் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும் தெரிய வந்தது.
உடனே அனீஷ் உறவினர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அனீஷ் கடத்தப்பட்ட சம்பவம் நடந்தது, களியக்காவிளை போலீஸ் சரகம் ஆகும். எனவே இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அனீசை கேரள போலீசார் எதற்காக பிடித்து சென்றனர் என்பது மர்மமாக உள்ளதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story