கால்நடை போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - கலெக்டர் ரோகிணி
சேலம் மாவட்டத்தில் கால்நடை போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று(நேற்று) பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டது. மாவட்டத்தில் 17 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வாங்கி கொடுத்துள்ளோம். 9 ஆயிரம் பேருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கால்நடை போலி டாக்டர்கள் இருப்பதாக கூட்டத்தில் விவசாயிகள் கூறி உள்ளனர். இதுதொடர்பாக கால்நடைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கால்நடை போலி டாக்டர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூர் அணை உபரிநீரை மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும்.
ஆடிப்பெருக்கான ஆடி மாதம் 18-ந் தேதி அன்று மேட்டூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள். தற்போது காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் குளிப்பதற்கு பாதுகாப்பான இடங்களை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பு தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story