வல்லாஞ்சேரியில் மகன் வேலைக்கு செல்லாததால் தாய் தீக்குளித்து தற்கொலை


வல்லாஞ்சேரியில் மகன் வேலைக்கு செல்லாததால் தாய் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 26 July 2018 3:58 AM IST (Updated: 26 July 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

வல்லாஞ்சேரியில் மகன் வேலைக்கு செல்லாததால் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் யசோதா (வயது 44). இவரது மகன் வேலைக்கு செல்லாமல் இருந்தார். யசோதா தன்னுடைய மகனை வேலைக்கு செல்லும் படி பல முறை கூறியும் மகன் வேலைக்கு செல்லாமல் இருந்து உள்ளார்.

இதனால் மனம் உடைந்த தாய் யசோதா நேற்று முன்தினம் மாலை தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் உடல் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யசோதா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story