மராத்தா போராட்டம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து - மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்பு கோரினார்


மராத்தா போராட்டம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து - மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்பு கோரினார்
x
தினத்தந்தி 26 July 2018 4:26 AM IST (Updated: 26 July 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

மராத்தா போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் இதற்காக மன்னிப்பு கோரினார்.

மும்பை,

இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாய மக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நேற்று மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் பேசுகையில், வன்முறையின் மூலம் மராத்தா சமுதாயத்தினர் எதையும் சாதிக்க முடியாது என்றும், சிலர் பணத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நடுவில் ஊடுருவி தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் கூறினார்.

இந்த கருத்து மராத்தா சமுதாயத்தினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் தனது கருத்து தவறாக திரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், தற்போது நடந்துகொண்டிருக்கும் வன்முறையை நிறுத்துமாறு கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

மராட்டிய மக்கள் பாரம்பரியமாக அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வு கண்டு வருகிறோம். மராத்தா சமுதாயத்தினர் அமைதியான முறையில் நடத்திய பேரணிகளை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டினர். இந்த அமைதி போராட்டம் தீய வழியில் சென்றுவிட கூடாது. நான் இடஒதுக்கீட்டை கட்சி கொள்கையை போல பார்க்கவில்லை. எனது கடமையாக பார்க்கிறேன்” என்றார்.

Next Story