ஏழை மக்களை பாதிக்கும் சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் பேட்டி


ஏழை மக்களை பாதிக்கும் சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 27 July 2018 2:30 AM IST (Updated: 26 July 2018 8:23 PM IST)
t-max-icont-min-icon

ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் கூறினார்.

நெல்லை, 

ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சொத்துவரி உயர்வு

தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி சொத்துவரியை இரு மடங்காக உயர்த்தி உள்ளது. குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரியை உயர்த்தி உள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும். எனவே உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம்.

லாரிகள் வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் கடந்த 20–ந்தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. லாரி உரிமையாளர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மத்திய–மாநில அரசுகள் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

மக்கள் பிரச்சினையை முன்னெடுத்து போராட்டம் நடத்தி வருகிறோம். அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்தி வருகிறோம். தேர்தலுக்கு எங்கள் கட்சியை தயார் செய்து வருகிறோம். மாவட்ட, மண்டல, மாநில மாநாடுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தேர்தல் கூட்டணி

பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் அறிவிப்போம்.

இவ்வாறு முபாரக் கூறினார்.

பேட்டியின்போது, மாநில செயலாளர் அகமது நவவி, மாவட்ட தலைவர் கனி, மாவட்ட துணை தலைவர்கள் சாகுல் அமீது உஸ்மானி, சலபி, பொதுச்செயலாளர் பீர்மஸ்தான், மாவட்ட செயலாளர்கள் ஹயாத், மஜித் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story