கல்லணைக்கால்வாயில் ‘திடீர்’ உடைப்பு ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்களை தண்ணீர் சூழ்ந்தது
தஞ்சை அருகே கல்லணைக்கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. கால்வாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்களில் சூழ்ந்து உள்ளது. இதையடுத்து உடைப்பை அடைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கள்ளப்பெரம்பூர்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 19–ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு 22–ந் தேதி வந்தடைந்தது. அங்கிருந்து பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் திறந்து விடப்பட்டது. கல்லணைக்கால்வாயில் 1000 கன அடி முதலில் திறக்கப்பட்டது. பின்னர் அது படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 3 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது.
இதனால் கல்லணைக்கால்வாயில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. தஞ்சையை அடுத்துள்ள ஆலக்குடி அருகே உள்ளது கல்விராயன்பேட்டை கிராமம். இந்த கிராமத்தில் கோனாவரி பாலம் அருகே தெற்கு கரையில் கல்லணைக்கால்வாயில் நேற்று காலை 7 மணி அளவில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. கல்லணையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்த உடைப்பு ஏற்பட்டது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் உடைப்பு அதிகரித்தது. 25 அடி அகலத்துக்கும், 20 அடி ஆழத்துக்கும் இந்த உடைப்பு ஏற்பட்டது.
இதனால் தண்ணீர் அருகில் தரிசாக கிடந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்களுக்குள் புகுந்தது. வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் கடல்நீர் போல காட்சி அளிக்கிறது. கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் செந்தில்குமரன், ரவிச்சந்திரன், முருகேசன், சுந்தர் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
மேலும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளும் அங்கு திரண்டு வந்து உடைப்பை அடைக்க முயன்றனர். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் உடைப்பை சரிசெய்ய முடியவில்லை. இதனைத்தொடர்ந்து மேலும் அதிகாரிகள் அங்கு வந்து உடைப்பை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் 2 பொக்லின் எந்திரங்கள், 8 டிப்பர் லாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. லாரிகள் மூலம் மண்ணை கொண்டு வந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கொட்டினர். ஆனாலும் உடைப்பை அடைக்க முடியவில்லை. இதையடுத்து முட்செடிகள் மற்றும் சீமைக்கருவேலமரங்களை வெட்டி தடுப்புகளை ஏற்படுத்தி அதன்மேல் மண்ணை கொட்டினர். ஆனாலும் உடைப்பை அடைக்க முடியவில்லை.
மேலும் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தினால் தான் உடைப்பை சரி செய்ய முடியும் என முடிவு செய்தனர். இதையடுத்து கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதை உடனடியாக நிறுத்தினர். இதையடுத்து நேற்று மதியம் 2 மணி அளவில் தண்ணீரின் வேகம் பாதியாக இருந்தது. பின்னர் மாலை 4 மணி அளவில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்ததையடுத்து உடைப்பை அடைக்கும் பணிகள் நடந்தது.
இதற்காக சவுக்கு கட்டைகள், 10 ஆயிரம் மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு உடைப்பை அடைக்கும் பணி தொடங்கியது. இரவு முழுவதும் அடைக்கும் பணி நடைபெற்றது. மேலும் ஆற்றில் வரும் நீரை திசை திருப்ப கோனாவாரி தடுப்பணை முழுவதுமாக திறக்கப்பட்டு கள்ளப்பெரம்பூர் ஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது.

Related Tags :
Next Story