பள்ளி வேனில் மாணவியிடம் சில்மிஷம் செய்த உதவியாளருக்கு தர்ம அடி
சென்னையில் பள்ளி வேனில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட உதவியாளருக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை போரூரை அடுத்த கொளப்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான ஒமேகா இண்டர்நேஷனல் பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவ-மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பள்ளி வேன், பஸ்சில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கொளப்பாக்கத்தில் உள்ள மாணவர்களை ஏற்றிச்செல்ல பள்ளி வேன் வந்தது. அதில் உதவியாளராக அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (வயது 48) இருந்தார்.
அப்போது கொளப்பாக்கத்தை சேர்ந்த யு.கே.ஜி. மாணவி, பள்ளி வேனில் செல்ல மறுத்தாள். இதுபற்றி அவரது பெற்றோர் விசாரித்தபோது, அந்த மாணவியிடம் பாஸ்கர் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள், பாஸ்கரிடம் இதுபற்றி கேட்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பாஸ்கரை சரமாரியாக அடித்து உதைத்து, அதே வேனில் பள்ளிக்கு அழைத்துச்சென்று பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து மாங்காடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இது பற்றி அறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் பள்ளி வளாகத்தில் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பள்ளி நிர்வாகி தங்களிடம் பேசி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறுகையில், பாஸ்கர், மாணவிகளை வேனில் ஏற்றவும், இறக்கவும் செய்யும்போது உதவி செய்வதுபோல் நடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். இந்த சம்பவத்தில் பாஸ்கர் மட்டும் ஈடுபட்டு உள்ளாரா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்ய வேண்டும். பள்ளி நிர்வாகமும் ஊழியர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றனர்.
பாஸ்கரை பள்ளி முன்பகுதி வழியாக அழைத்து சென்றால் அவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பள்ளியின் பின்பகுதியில் உள்ள சுற்றுச்சுவரில் எகிறி குதித்து பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பாஸ்கரை கைது செய்தனர். வேனில் செல்லும்போது இதுபோல் பல மாணவிகளிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிந்தது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனவும் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரை போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகம் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

Related Tags :
Next Story