சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் மனித கடத்தல் விழிப்புணர்வு பேரணி
மனித கடத்தல் எதிர்ப்பு தினம் வருகிற 30-ந் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சர்வதேச நீதி மையத்துடன் (ஐ.ஜே.எம்.) இணைந்து சென்னை சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சென்னை,
சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான ஜெயந்தி ஐசக் தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு பேரணியில் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள், ரெயில்வே ஊழியர்கள், சென்டிரல் ரெயில்வே இன்ஸ்பெக்டர் ஆர்.தாமஸ் ஜேசுதாசன், ரெயில்வே பாதுகாப்புப்படை (ஆர்.பி.எப்.) இன்ஸ்பெக்டர் எம்.சகாயராஜ் தலைமையில் போலீசார் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
பேரணி சென்டிரல் ரெயில் நிலைய பிரதான நுழைவுவாயிலில் தொடங்கி, மூர்மார்க்கெட் ரெயில் நிலைய நுழைவுவாயில் அருகே முடிவடைந்தது. அங்கு பிரபல பாடகர் கானா பாலாவின் விழிப்புணர்வு பாடல் மற்றும் ‘முகவரி’ கலைக்குழுவினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது.
முன்னதாக நீதிபதி ஜெயந்தி ஐசக் நிருபர்களிடம் கூறுகையில், “தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை அடிப்படையில் கடந்த 2016-17-ம் ஆண்டில் பாலியல் தொழில் மற்றும் கொத்தடிமைக்காக 8 ஆயிரத்து 132 பேர் கடத்தப்பட்டு உள்ளனர். இதில் 1,096 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மனித கடத்தல் என்பது நம் சமூகத்தின் சோகம். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெறுகிறது”, என குறிப்பிட்டார்.

Related Tags :
Next Story