தளி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை பலி


தளி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 27 July 2018 3:45 AM IST (Updated: 27 July 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

தளி அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள சொல்லேபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. விவசாயி. இவருடைய மகன் அமல்ராஜ் (வயது 29). பெங்களூருவில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது.

கணவன் - மனைவி 2 பேரும் பெங்களூருவில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சொல்லேபுரம் கிராமத்திற்கு வந்த அமல்ராஜ் இரவு மோட்டார்சைக்கிளில் பெங்களூருவுக்கு திரும்பினார். தளி - ஓசூர் சாலையில் உப்பாரப்பள்ளி கிராமம் அருகே செல்லும் போது எதிரே ஆனேக்கல்லை சேர்ந்த சுதா என்பவர் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிளும், அமல்ராஜின் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த அமல்ராஜ் மற்றும் சுதா ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அமல்ராஜ் பரிதாபமாக இறந்தார். சுதாவிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story