ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் : பெண்கள் உள்பட 5 பேர் கைது
மும்பை ஓட்டலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
புனேயில் இருந்து மும்பைக்கு சட்டவிரோதமாக தங்கத்தை விற்பனை செய்ய ஒரு கும்பல் வர உள்ளதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் சம்பவத்தன்று போரிவிலி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.21 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் வந்த மெகபூப் சேக் (வயது39), ஜாபர் (46), முகமது சேக் (30) மற்றும் பெண்கள் சஜியா (37), தாபாசும் (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட கும்பல் வெளிநாடுகளில் இருந்து புனே விமான நிலையத்திற்கு தங்கத்தை கடத்தி வந்து, அந்த தங்கத்தை மும்பை ஜாவேரி பஜார் மற்றும் சென்னையில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அந்த கும்பல் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் அதிகளவு தங்கத்தை பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறையில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான 6¾ கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார், வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story