முதல்-மந்திரி பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் அசோக் சவான் வலியுறுத்தல்
மராத்தா போராட்ட விவகாரத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறினார்.
மும்பை,
மராத்தா சமுதாய மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு கேட்டு நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
இந்த நிலையில், சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவுத் அளித்த பேட்டியில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீது கட்சியின் தலைமை அதிருப்தியில் உள்ளதாகவும் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறுஒருவரை முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலையில் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அசோக் சவான் நேற்று கூறுகையில், “பா.ஜனதா கட்சியின் உள் விவகாரம் குறித்து எங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. மாநிலத்தில் தற்போது சட்டம்- ஒழுங்கு நல்ல நிலையில் இல்லை. பா.ஜனதா அரசும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் தான் இதற்கு காரணம்.
எனவே முதல்-மந்திரி பட்னாவிசை மாற்றுவதற்கு முன்பு அவரே பதவியை விட்டு விலகவேண்டும்”் என்றார்.
மேலும் தேவேந்திர பட்னாவிஸ் மராத்தா சமுதாயத்தவர் இல்லை என்பதால் தான் தொடர்ந்து இலக்காக்கப்படுவதாக கூறிய குற்றச்சாட்டையும் மறுத்தார்.
மேலும் நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவும் முதல்-மந்திரி பட்னாவிஸ் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மராத்தா சமுதாயத்தினருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ மராத்தா சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் யாரும் தங்கள் உயிரை தியாகம் செய்ய கூடாது. அவர்கள் ஒவ்வொருவரும் மராட்டியத்தை கட்டமைக்கவும், வெளியில் இருந்து வருபவர்களை எதிர்த்து போராடவும் வேண்டும்” என்றார்.

Related Tags :
Next Story