மராத்தா சமுதாயத்தினர் போராட்டத்தில் வன்முறை : நவிமும்பையில் இணையதள சேவை துண்டிப்பு


மராத்தா சமுதாயத்தினர் போராட்டத்தில் வன்முறை : நவிமும்பையில் இணையதள சேவை துண்டிப்பு
x
தினத்தந்தி 27 July 2018 5:38 AM IST (Updated: 27 July 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

மராத்தா சமுதாயத்தினர் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதின் எதிரொலியாக நவிமும்பையில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராத்தா சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நவிமும்பையில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கோபர்கைர்னே பகுதியில் போராட்டக்காரர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கினர். செக்டார் 6-ல் போலீஸ் சவுக்கி தீ வைத்து எரிக்கப்பட்டது.

கோபர்கைர்னேயில் நேற்று முன்தினம் இரவு போராட்டக்காரர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

எனவே நேற்று நவிமும்பையில் கோபர்கைர்னே உள்ளிட்ட சில பகுதிகளில் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டது. இது குறித்து நவிமும்பை போலீஸ் துணை கமிஷனர் துஷார் ஜோஷி கூறியதாவது:-

போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டதை அடுத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நவிமும்பை பகுதியில் இணையதள சேவையை துண்டித்து உள்ளன. பதற்றம் குறைந்த பிறகு மீண்டும் அங்கு இணையதள சேவை தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story