வைர கற்கள் பூங்கா
அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாநிலத்தில் டயமண்ட் ஸ்டேட் பார்க் இருக்கிறது. உலகிலேயே பொதுமக்கள் சென்று வரக்கூடிய ஒரே வைரச் சுரங்கம் இதுதான்.
புதையல் வேட்டையை நிஜ வாழ்க்கையில் அனுபவிக்க நினைப்பவர்கள் இந்தச் சுரங்கத்துக்குச் செல்லலாம். ஒவ்வோரு ஆண்டும் சுமார் 600 வைரக் கற்களை இங்கு வரும் பார்வையாளர்கள் கண்டு பிடித்துக் கொடுக்கிறார்கள்.
1906-ம் ஆண்டு ஜான் ஹட்டில்ஸ்டோன் என்ற விவசாயி மூலம் இங்கே வைரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த நிலம் அரசாங்கத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. 1972-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் வந்து செல்லும் விதமாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 19 ஆயிரம் வைரக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இங்கே வரும் குழந்தைகளும் பெரியவர்களும் வைரங்களைத் தேடும் பணியில் பல மணி நேரம் ஈடுபடுகிறார்கள். கண்டெடுத்த வைரங்களின் மதிப்புக்கு ஏற்றவாறு அவர்களுக்குச் சன்மானமும் வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story