சிகிச்சைக்கு சோதனை..!


சிகிச்சைக்கு சோதனை..!
x
தினத்தந்தி 27 July 2018 2:42 PM IST (Updated: 27 July 2018 2:42 PM IST)
t-max-icont-min-icon

ஜப்பானின் குராஷிகி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளுக்கான பயிற்சிகள் மருத்துவ மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

பயிற்சி பெற நினைப்பவர்களுக்கு எழுத்துத் தேர்வு தவிர்த்து, மூன்று பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. முதல் சோதனை ஒரிகாமி. தாளில் கொக்கு ஒன்றைச் செய்ய வேண்டும். ஜப்பானியர்களுக்கு ஒரிகாமி செய்வது ஒன்றும் கடினம் அல்ல. ஆனால் 1.5 சதுர செ.மீ. அளவுள்ள தாளில் கொக்கு செய்ய வேண்டும். இவ்வளவு சிறிய தாளில் கொக்கு செய்வது என்பது உண்மையிலேயே கடினமான சோதனைதான்.

அடுத்தது, 35 மி.மீ அளவுள்ள ஓர் இறந்த வண்டின் 13 பாகங்கள் தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டிருக்கும். எந்த உறுப்புக்கும் சேதம் விளைவிக்காமல், எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, முழு வண்டாக மாற்றிவிட வேண்டும். மூன்றாவதாக 5 மி.மீ. அளவுகளில் ஜப்பானின் புகழ்பெற்ற உணவான சுஷியை தயார் செய்து வைக்க வேண்டும். 15 நிமிடங்களில் ஒவ்வொரு சவாலையும் மாணவர்கள் செய்து முடிக்க வேண்டும். யார் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார்களோ அவர்களுக்கு அறுவை சிகிச்சை பயிற்சியளிக்கப்படுகிறது.

‘‘கவனம், ஒருங்கிணைப்பு, நடுக்கமில்லாத கைகள் போன்றவை ஓர் அறுவை சிகிச்சைக்கு இன்றியமையாதவை. அவற்றை எல்லாம் மருத்துவர்களுக்கு கொண்டு வருவதற்காகவே இந்தப் பரிசோதனைகளை அளிக்கிறோம். 40 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். இதில் வண்டின் பாகங்களைச் சரியாக இணைக்க முடியாத மாணவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்வதில்லை’’ என்கிறார்கள் குராஷிகி மருத்துவமனையின் நிர்வாகிகள். 

Next Story