ஆச்சரியமான நட்பு
அமெரிக்காவில் வசிக்கிறார் குழந்தை எழுத்தாளர் ஜுலியா ஜேசன். அவரது 18 மாதக் குழந்தை அலியாவுக்குத் தோழனாக இருக்கிறது ஒரு கங்காரு.
அலியாவும் கங்காருவும் ஒரே உணவைச் சாப்பிடுகிறார்கள், ஒன்றாகவே விளையாடுகிறார்கள். மூர்க்கமான விலங்காக கருதப்படும் கங்காரு, ஒரு குழந்தையிடம் இத்தனை அன்பு காட்டுவது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தருகிறது.
‘‘என்னுடைய புத்தகங்களில் விலங்குகளைத் தான் கதாபாத்திரங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். ‘பூமேரூ’ என்ற கங்காரு என் கதை களில் வரும். என் குழந்தை பிறந்த உடனே நிஜக் கங்காருவை அறிமுகம் செய்துவிட்டேன். குழந்தை வளர, வளர கங்காருவுக்கும் அலியாவுக்கும் நட்பு இறுக்கமானது. கங்காருவின் காது, வால், மூக்கு என்று எதைப் பிடித்து அலியா இழுத்தாலும் கங்காரு அமைதியாகவே இருக்கும். அதனுடன் அலியா இருக்கும்போது நான் அவளை பற்றி கவலைப்பட மாட்டேன்’’ என்கிறார் ஜுலியா.
Related Tags :
Next Story