மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 31–ந் தேதி பட்டமளிப்பு விழா கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம் வழங்குகிறார்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வருகிற 31–ந் தேதி (செவ்வாய்க் கிழமை) பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
நெல்லை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வருகிற 31–ந் தேதி (செவ்வாய்க் கிழமை) பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.
பட்டமளிப்பு விழாநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 26–வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி. கலையரங்கில் வருகிற 31–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி, மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதில் முனைவர் பட்டம் மற்றும் பதக்கம் பெறுகிற மாணவர்களுக்கு கவர்னர் நேரடியாக பட்டங்களை வழங்குகிறார்.
அமைச்சர் அன்பழகன்தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்தி பேசுகிறார். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜன் பட்டமளிப்பு உரையாற்றுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர், பதிவாளர் சந்தோஷ் பாபு மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.