தந்தையை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு


தந்தையை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 28 July 2018 4:15 AM IST (Updated: 28 July 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் தந்தையை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தாமரைக்குளம்,

அரியலூர் அருகே உள்ள அயன்ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மகன் தங்கராசு. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். செல்லமுத்து, அதே பகுதியை சேர்ந்த பழனிவேல்(வயது 38) என்பவருடைய காதல் திருமணத்துக்கு இடையூறாக இருந்ததாக, இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

கடந்த 26.8.2015 அன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பழனிவேல், செல்லமுத்துவை அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே செல்லமுத்து துடிதுடித்து இறந்தார். இது குறித்து தங்கராசு கொடுத்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீசார் வழக்குப் பதிந்து பழனிவேலை கைது செய்தனர்.

இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இறுதி விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று நீதிபதி சுமதி தீர்ப்பளித்தார். இதில், பழனிவேலுக்கு ஆயுள் தண்டனையும் அபராதமாக ரூ.2 ஆயிரமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பழனிவேலை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story