சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி இருப்பதை கண்டித்தும், உயர்த்திய சொத்து வரியினை திரும்ப பெறக்கோரியும், சொத்து வாரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
அ.தி.மு.க. அரசு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி இருப்பதை கண்டித்தும், உயர்த்திய சொத்து வரியினை திரும்ப பெறக்கோரியும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நைனாமுகமது முன்னிலை வகித்தார்.
இதில் மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர பேரூர் கழக செயலாளர்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி, வட்ட கழக செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி இருப்பதை கண்டித்தும், உயர்த்திய சொத்து வரியினை திரும்ப பெறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல அறந்தாங்கி நகராட்சி முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ரகுபதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மெய்யநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அறந்தாங்கி நகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் அறந்தாங்கி தெற்கு பொன்.கணேசன், மணமேல்குடி சக்தி ராமசாமி, கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Related Tags :
Next Story