மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தனியார் பஸ் கண்டக்டர் சாவு


மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தனியார் பஸ் கண்டக்டர் சாவு
x
தினத்தந்தி 28 July 2018 3:52 AM IST (Updated: 28 July 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் பஸ் கண்டக்டர் இறந்தார்.

குத்தாலம், 



நாகை மாவட்டம், குத்தாலம் அருகே பழைய கூடலூர் சின்னகொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் அருட்செல்வம் (வயது 30). தனியார் பஸ் கண்டக்டர். நேற்று முன்தினம் மதியம் பணியை முடித்துவிட்டு அருட்செல்வம், கும்பகோணத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஆடுதுறை-பொறையாறு சாலையில் அக்கரைகொக்கூர் கிராமத்தை கடந்து சென்றபோது அந்த பகுதியில் ஆற்றங்கரையில் உள்ள ஒரு தேக்கு மரத்தில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருட்செல்வம், அந்த ஆற்றின் மதகில் மோதி பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அருட்செல்வம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story