வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த ரூ.2¾ கோடி அமெரிக்க டாலர் பறிமுதல்


வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த ரூ.2¾ கோடி அமெரிக்க டாலர் பறிமுதல்
x
தினத்தந்தி 28 July 2018 5:25 AM IST (Updated: 28 July 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த ரூ.2¾ கோடி அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர்.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் இருந்து அதிகளவு வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சம்பவத்தன்று துபாய் செல்ல இருந்த 4 பயணிகளை பிடித்து சோதனை போட்டனர்.

இந்த சோதனையில் அவர்களிடம் இருந்த 2 மடிக்கணினி, பைகளில் இருந்து கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் விமானநிலைய போலீ சாரிடம் ஒப்படைக்கப்பட் டனர்.

மற்றொரு சம்பவத்தில் பாங்காக் செல்ல இருந்த 4 பேரிடம் இருந்து அதிகளவு அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 2 சம்பவங்களிலும் 4 மடிக்கணினிகள், ரூ.2¾ கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story