வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்தது ஏன்? - ஆணையர் ரமேஷ் விளக்கம்
நாகர்கோவில் மண்டல அலுவலகத்தில் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்தது ஏன்? என்பது குறித்து ஆணையர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் கே.ரமேஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முந்திரி தொழிற்சாலைகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடல் போன்ற பல்வேறு காரணங்களால் நாகர்கோவில் மண்டல அலுவலகத்தில் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எனவே குமரி மாவட்டத்தில் இதுவரை வருங்கால வைப்புநிதி திட்டத்தில் சேர்க்கப்படாமல் இருக்கும் தொழிலாளர்களை உடனடியாக தொழில் நிறுவனர்கள் சேர்க்க முன்வர வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படாமல் இருக்கும் தொழிலாளர்கள் யாராவது இருந்தால் எங்கள் அலுவலகத்தில் நேரடியாகவோ, தொலைபேசி எண்கள் மூலமாகவோ தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை வருங்கால வைப்புநிதி திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் சந்தாதொகையை அந்தந்த மாதத்திலேயே தொழில் நிறுவனர்கள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாத தொழில் நிறுவனர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்தில் இடம் உள்ளது. எனவே தொழில் நிறுவனர்கள் தாமாக முன்வந்து அந்தந்த மாதத்திலேயே தொழிலாளர்களின் சந்தா தொகையை செலுத்த முன்வர வேண்டும்.
வைப்புநிதி உறுப்பினர்கள் தங்களுடைய வைப்புநிதி மற்றும் ஓய்வூதியப் பலன்களை அவர்கள் ஓய்வு பெறும் நாள் அன்றே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட தொழிலாளரின் ஆதார் எண், வங்கி கணக்கு எண், செல்போன் எண் ஆகியவற்றை வருங்கால வைப்புநிதி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். எனவே ஓய்வு பெற உள்ள தொழிலாளர்களுடைய சந்தாவை ஒரு மாதம் முன்னதாகவே செலுத்துமாறு தொழிலதிபர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு வைப்புநிதி சந்தாதாரர்கள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
உறுப்பினர்கள் வீடு கட்டுவதற்கும், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனை வாங்குவதற்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். வைப்புநிதி சந்தாதாரர்கள் தங்கள் வைப்புநிதி கணக்கில் இருந்து 90 சதவீதம் தொகையை எடுத்துக் கொள்ளலாம். தவணைத்தொகையை வைப்புநிதி சந்தாவில் இருந்தே செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி வேலைவாய்ப்பு ஊக்க திட்டத்தின்படி தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் உறுப்பினராக சேரும் அனைத்து புதிய தொழிலாளர்களுக்கும் அவர்கள் வேலையில் சேர்ந்த முதல் 3 ஆண்டுகளுக்கு தொழிலதிபர் செலுத்த வேண்டிய ஓய்வூதிய திட்ட பங்குத்தொகையான 8.33 சதவீதத்தை மத்திய அரசு செலுத்தும். உறுப்பினர் தனது வேலையை ஒரு தொழிலதிபரிடம் இருந்து வேறொரு இடத்தில் மாறும் போதும் இந்த பயனை அவர் தொடர்ந்து பெறலாம். இத்திட்டமானது 9-8-2016-ல் இருந்து அமலில் இருந்து வருகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள அனைவரும் தங்களுடைய வருங்கால வைப்புநிதி எண்ணுடன் ஆதார் எண்ணை உள்ளடு செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு பணி மாற்றம் அல்லது இடமாற்றம் பெறும்போதும் முன்பணம் மற்றும் அவசிய தேவைக்காக வைப்புநிதி கணக்கை முடித்துக்கொள்ள தேவையில்லை.
இவ்வாறு வருங்கால வைப்புநிதி ஆணையர் ரமேஷ் தெரிவித்தார். பேட்டியின்போது உதவி ஆணையர்கள் ரவுசன் கஸ்யப், சுமன் சவுரவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story