பெங்களூருவில் போலி கலால்துறை அதிகாரி கைது
பெங்களூருவில் நகைக்கடையில் திருடியதுடன், காதலியிடம் ஐ-போனை ‘அபேஸ்‘ செய்துவிட்டு தலைமறைவான போலி கலால்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
தெலுங்கானா மாநிலத்தில் கலால்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறி நகைக்கடையில் திருடி, பெண்ணிடம் ஐ-போனை ‘அபேஸ்‘ செய்தவரை பெங்களூரு பசவனகுடி போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாராவை சேர்ந்த அப்துல் முபாரக் என்கிற வினய் குமார் என்கிற முகமது (வயது 40) என்பது தெரியவந்தது.
இவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் கைவரிசை காட்டியது எப்படி? என்பது பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அப்துல் முபாரக் மெக்கானிக் ஆவார். ஆனால், அவர் தெலுங்கானா மாநிலத்தில் கலால்துறையில் சூப்பிரண்டாக பணி செய்கிறேன் என பி.எம்.டி.சி. பஸ்சில் தன்னுடன் பயணித்த பெண்ணிடம் கூறியுள்ளார். அந்த பெண்ணிடம் அவர் செல்போன் எண்ணையும் பெற்றுக்கொண்டார். மேலும், அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார். இதற்கு அந்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நகை வாங்க வேண்டும் என்று அந்த பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி பசவனகுடி டி.ஜி.பி. ரோட்டுக்கு அப்துல் முபாரக் அழைத்து சென்றார். அங்கு 28 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலியை வாங்கிய அப்துல் முபாரக் அதை அணிந்து பார்ப்பதாக கூறி நைசாக நகைக்கடையில் இருந்து வெளியே சென்று தலைமறைவானார். இந்த வேளையில், அந்த பெண் வைத்திருந்த ஐ-போனையும் அவர் ‘அபேஸ்‘ செய்திருந்தார்.
இதுகுறித்து, நகைக்கடை உரிமையாளர் மற்றும் பெண் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பசவனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். முதற்கட்டமாக நகைக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவருடைய உருவம் பதிவாகி இருந்தது.
இதை வைத்து தலைமறைவாக இருந்த அப்துல் முபாரக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் இதேபோல் ஏற்கனவே அவர் மும்பையில் கைவரிசை காட்டியதும், இதுதொடர்பாக மும்பை ஏ.பி.எம்.சி. போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. கைதான அப்துல் முபாரக்கிடம் இருந்து 28 கிராம் தங்க சங்கிலி, ஐ-போன், கலால்துறை அதிகாரிக்கான போலி அடையாள அட்டை, ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story