58-வது பிறந்தநாள்: உத்தவ் தாக்கரேக்கு மோடி, ராகுல் காந்தி வாழ்த்து
சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் 58-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
மும்பை,
சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடி னார். இதைத்தொடர்ந்து பாந்திரா மாதோஸ்ரீ இல்லத்தில் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அவரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தநிலையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தவ் தாக்கரேக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “உத்தவ் தாக்கரேக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த நாட்டிற்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட, ஆரோக்கியமான ஆயுளை வழங்கட்டும்” என்று கூறியுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், “உத்தவ் தாக்கரேக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக் கள். நீங்கள் எப்போதும் நல்ல உடல்நிலையுடனும், உற்சாகத்துடன் இருக் கவேண்டும் என்று விரும்புகிறேன்” என அதில் கூறியுள்ளார்.
சிவசேனா கட்சி தற்போது பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் சமீபத்தில் நாடாளு மன்றத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக நடத்தப்பட்ட நம் பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தியை சிவசேனா கட்சி வெகுவாக பாராட்டியது. இந்தநிலையில் உத்தவ் தாக்கரேக்கு, ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து கூறியது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது.
இது குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் கூறுகையில், “உத்தவ் தாக்கரேக்கு நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவித்து வருகின்றன. இந்த முறை ராகுல்காந்தி வெளிப்படையாக அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்” என்றார்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், ராகுல் காந்தி மற்றொரு கட்சியின் தலைவருக்கு தனது வாழ்த்தை பகிர்ந்துள்ளார். இதற்குமேல் அதில் படித்து தெரிந்துகொள்ள வேரேதும் இல்லை” என தெரிவித்தார்.

Related Tags :
Next Story