சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈசுவரர் கோவிலில் ஆடி தபசு திருவிழா
சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈசுவரர் கோவிலில் ஆடி தவசு திருவிழா நடந்ததது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏரல்,
சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈசுவரர் கோவிலில் ஆடி தவசு திருவிழா நடந்ததது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சங்கர ஈசுவரர் கோவில்
ஏரலை அடுத்த சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈசுவரர் கோவிலில் ஆடி தவசு திருவிழா கடந்த 18–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் யாகவேள்வி பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தினமும் இரவில் கோமதி அம்பாள் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
10–ம் திருநாளான நேற்று முன்தினம் அதிகாலையில் மூலஸ்தான சுவாமி–அம்பாளுக்கு கும்பாபிஷேகம், யாக வேள்வி, தீபாராதனை நடந்தது. காலையில் அம்பாள் தவசுக்கு எழுந்தருளினார். பின்னர் தாமிரபரணி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நகர்வலம் வந்தனர். மதியம் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சுவாமி– அம்பாள் வீதி உலா
மாலையில் சங்கரேசுவரர் சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். இரவு 1 மணி அளவில் சங்கரநாராயணர் அம்பாளுக்கு சங்கரேசுவரராக காட்சி அளித்தார். பின்னர் சங்கரேசுவரர்– கோமதி அம்பாள் பொன் சப்பரங்களில் எழுந்தருளி, நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story