தஞ்சையில் ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு 900 பேர் பங்கேற்பு


தஞ்சையில் ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு 900 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 July 2018 4:15 AM IST (Updated: 28 July 2018 10:43 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு நேற்று நடந்தது. இதில் 900 பேர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் உள்ள 110 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆட்கள் தேர்வு தஞ்சை கோர்ட்டு சாலையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. ஆட்கள் தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு உயரம், மார்பு அளவு மற்றும் சான்றிதழ் ஆகியவை சரிபார்க்கப்பட்டது. இதில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்ச்சிபெற்ற இளைஞர்களுக்கு அடுத்த மாதம் 5–ந்தேதி முதல் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.


இதில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் இருந்து 900–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், முருகேசன், ஊர்க்காவல்படை தஞ்சை மண்டல துணைத்தலைவர் செந்தில்குமார், துணை மண்டல தளபதி மங்களேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story