அரசு மருத்துவமனை டாக்டர்கள் 12 மணி நேர வேலை நிறுத்த போராட்டம்
திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் 12 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மருத்துவ கல்லூரி புறநோயாளிகள் பிரிவு முன்பு டாக்டர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் மாலதி வரவேற்றார். இணை செயலாளர் ஹேமலதா, பொருளாளர் அஜந்தா ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
அப்போது தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இந்தத் திட்டம் சாமானிய மக்களுக்கு எதிரானது என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் புறநோயாளிகள் பிரிவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதேபோல் இந்திய மருத்துவ சங்கத்தின் ஆரணி கிளை தலைவர் டாக்டர் எஸ்.வாசுதேவன், செயலாளர் டாக்டர் அமர்நீதிகணேசன், பொருளாளர் டாக்டர் டி.மாணிக்கராஜ், மாநில துணை செயலாளர் டாக்டர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள், ஆரணியில் உள்ள 47 தனியார் டாக்டர்களும் 12 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story