தனிமாநில கோரிக்கை பின்னணியில் பா.ஜனதா உள்ளது மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
வடகர்நாடக பிரச்சினையில் மக்களை திசை திருப்ப முயற்சிப்பதுடன், தனிமாநில கோரிக்கையின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகர்நாடக மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்றும், பட்ஜெட்டில் அந்த மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் மக்களிடையே தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. உண்மையில் பட்ஜெட்டில் வடகர்நாடக மாவட்டங்கள் புறக்கணிக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களை போல வடகர்நாடக மாவட்டங்களுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக, மக்களிடையே ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது.
வடகர்நாடக பிரச்சினையில் மக்களை திசை திருப்ப பா.ஜனதா முயன்று வருகிறது. கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதால், வடகர்நாடக பிரச்சினையை பா.ஜனதா கையில் எடுத்து, மக்களிடம் கூட்டணி ஆட்சிக்கு எதிரான அலையை உருவாக்க நினைக்கிறது. பா.ஜனதாவின் கனவு ஒரு போதும் பலிக்காது. வடகர்நாடகத்திற்கு தனிமாநிலம் கேட்டு சில அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. இதற்கு பின்னணியில் பா.ஜனதா உள்ளது.
மாநிலத்தில் விவசாய கடன் ரூ.48 ஆயிரம் கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் சந்தோஷமாக உள்ளனர். விவசாயிகளின் சந்தோஷத்தை கெடுக்கும் விதமாக கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பா.ஜனதாவினர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். அந்த போராட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் பங்கேற்கவில்லை. பா.ஜனதா கட்சி தொண்டர்கள் தான் பாதயாத்திரையில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பச்சை துண்டுவை கழுத்தில் போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் ஆகிவிட முடியுமா?.
விவசாய கடன் தள்ளுபடி செய்ததில் அரசியல் ஆதாயத்திற்காக விதிமுறைகளை மீறி பா.ஜனதாவினர் பேசி வருகிறார்கள். விவசாய கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு சிறிதளவு கூட நிதி உதவி செய்யவில்லை. மாநில அரசின் நிதி மூலமாகவே கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. வடகர்நாடக மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி மாநிலத்தை உடைக்க நினைப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அகண்ட கர்நாடகம் ஒன்றே கூட்டணி ஆட்சியின் குறிக்கோளாகும்.
இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

Related Tags :
Next Story