5-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் பங்கேற்கும்
டெல்லியில் செப்டம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் பங்கேற்கும் என்று தர்மபுரியில் நடந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர் அமானுல்லாகான் கூறினார்.
தர்மபுரி,
காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட 28-வது பொது மாநாடு தர்மபுரியில் நேற்று தொடங்கியது. மாநாட்டிற்கு கோட்ட தலைவர் லஷ்மிசிதம்பரம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் நாகராசன் வரவேற்றார். சங்க அகில இந்திய தலைவர் அமானுல்லாகான் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் செந்தில்குமார், இணை செயலாளர் சிவசுப்பிரமணியன், துணை தலைவர் தர்மலிங்கம், உதவி பொருளாளர் ஜானகிராமன், கோட்ட பொதுச்செயலாளர் கலியபெருமாள், கோட்ட இணை செயலாளர் மாதேஸ்வரன், பொது காப்பீட்டு ஊழியர் சங்க மண்டல செயலாளர் சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் அகில இந்திய தலைவர் அமானுல்லாகான் நிருபர்களிடம் கூறுகையில், ஒரு லட்சம் ஊழியர்கள் பணிபுரியும் எல்.ஐ.சி. இந்தியாவில் மிகவும் லாபகரமான பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 42 கோடி பாலிசிதாரர்கள் கொண்ட இந்த நிறுவனம் ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இதில் பாலிசி பிரிமியம் மூலம் ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. எல்.ஐ.சி.யின் நிர்வாகத்தில் தலையிடுவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். தொழிலாளர்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க கோரி வருகிற செப்டம்பர் மாதம் 5-ந்தேதி டெல்லியில் நடைபெறும் பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தில் எங்கள் சங்கம் பங்கேற்கும். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு மாதம் 14, 15-ந்தேதிகளில் நாடு தழுவிய அளவில் இரவில் நடக்கும் போராட்டங்களிலும் பங்கேற்போம் என்று கூறினார்.
இந்த மாநாட்டில் தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த காப்பீட்டு கழக ஊழியர்கள் பங்கேற்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக மாநாடு தொடர்ந்து நடக்கிறது.

Related Tags :
Next Story