போலி சான்றிதழ் விவகாரம் : 7 டாக்டர்களுக்கு 5 ஆண்டு தடை


போலி சான்றிதழ் விவகாரம் : 7 டாக்டர்களுக்கு 5 ஆண்டு தடை
x
தினத்தந்தி 29 July 2018 4:40 AM IST (Updated: 29 July 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

போலி சான்றிதழ் விவகாரத்தில் 7 டாக்டர்களுக்கு 5 ஆண்டு மருத்துவ பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் பல டாக்டர்கள் மாநில மருத்துவ கவுன்சிலில் போலி மருத்துவ மேற்படிப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்து இருப்பதாக புகார்கள் வந்தன. இந்த புகார் குறித்து மாநில மருத்துவ கவுன்சில் விசாரணை நடத்தியது. அப்போது 77 டாக்டர்கள் போலி மருத்துவ மேற்படிப்பு சான்றிதழை சமர்ப்பித்து இருந்தது தெரியவந்தது.

இதில், 20 டாக்டர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரியங்கா பாகத், மயங் சர்மா, விபுல் குமார் பட்டேல், சுஜித்தா கோயல், ரேகா, நடாஷா, பந்தானா ஆகிய 7 டாக்டர்கள் 5 ஆண்டுகளுக்கு மருத்துவ பணி செய்யத்தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதே விவகாரத்தில் மீதமுள்ள 50 டாக்டர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story