இயந்திர நகப்பூச்சு


இயந்திர நகப்பூச்சு
x
தினத்தந்தி 29 July 2018 1:33 PM IST (Updated: 29 July 2018 1:33 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் பயன்படுத்தும் நகப்பூச்சுகளில் அவர்களின் ரசனைக்கேற்ப புதுமைகள் புகுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

பெண்கள் பயன்படுத்தும் நகப்பூச்சுகளில் அவர்களின் ரசனைக்கேற்ப புதுமைகள் புகுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. நெயில்ஸ்டார் என்ற சிறிய இயந்திரமும் அந்த ரகத்தை சேர்ந்ததுதான். இந்த இயந்திரம் சில நொடிகளில் அழகாக நகப்பூச்சு செய்து விடுகிறது. இதற்காக விதவிதமான நகப்பூச்சு வடிவங்கள் இந்த இயந்திரத்தின் திரையில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. அவற்றுள் பிடித்தமான வடிவத்தை தேர்ந்தெடுத்து பட்டனை அழுத்திவிட்டு, விரல்களை வைத்தால் போதும். சில நொடிகளில் நகங்களில் அந்த உருவங்கள் நகப்பூச்சாக மாறிவிடும். இந்த இயந்திரம் இயங்கும் விதம் வீடியோ வடிவில் இணையதளங்களில் பரவலாகி வருகிறது. கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர் இதனை பதிவேற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார்.

Next Story