ராஜபாளையத்தில் டிரைவர் வெட்டிக்கொலை
ராஜபாளையம் காந்தி நகரில் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய டிரைவர் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரில் இளைஞர் ஒருவர் ரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. தகவலை அடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது 33 வயது மதிக்கத்தக்க ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களுடன் பிணமாக கிடந்தார். போலீசார் விசாரணையில், அவர் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்த சங்கர் என்பதும், கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. டிரைவராக வேலை பார்த்து வந்தவர் கடந்த 10 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது. முன்விரோதத்தில் கொலை நடந்ததா அல்லது வேறு காரணத்தால் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story