கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 July 2018 4:00 AM IST (Updated: 30 July 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி,

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும், வாகன இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் கே.முஸ்தபா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது ரபீக், சக்கரை மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மீரான் மைதீன் வரவேற்று பேசினார். எஸ்.டி.பி.ஐ. திருச்சி மாவட்ட தலைவர் இமாம் ஹசான், மாநில பொதுச்செயலாளர் அஜித் ரகுமான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் நியாமத்துல்லா, செயலாளர் ரபீக் முகமது, பொருளாளர் காஜாமைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story