விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்


விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 30 July 2018 4:15 AM IST (Updated: 30 July 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வலங்கைமான்,

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாசிலாமணி முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராசு, திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட 24-வது மாநாடு ஆலங்குடியில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 26, 27-ந் தேதிகளில் நடக்கிறது. விவசாயிகள் விரும்பும் சம்பா பயிர் விதைகளை உரிய காலத்தில் வரவழைத்து மாநிலம் முழுவதும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.

சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் செய்துள்ள விவரங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தங்கமுத்து, சங்க மாவட்ட துணைச்செயலாளர் ஜோசப், நிர்வாகிகள் ராவணன், விஸ்வநாதன், செந்தில்குமார், கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story