கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதி: மனவருத்தம் அடைந்த மதுரை தி.மு.க. தொண்டர் தற்கொலை


கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதி: மனவருத்தம் அடைந்த மதுரை தி.மு.க. தொண்டர் தற்கொலை
x
தினத்தந்தி 30 July 2018 4:30 AM IST (Updated: 30 July 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் மனவருத்தம் அடைந்த மதுரை தி.மு.க. தொண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

செக்கானூரணி,

மதுரை அருகே செக்கானூரணி கொக்குளம் ஊராட்சியை சேர்ந்த தேன்கல்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கந்தன். அவருடைய மகன் மலைச்சாமி (வயது 30). தி.மு.க. தொண்டரான இவர், கூலி வேலை செய்து வந்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறித்து அறிந்து மலைச்சாமி மிகுந்த மனவருத்தம் அடைந்து காணப்பட்டார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறிவந்தனர். இந்தநிலையில் திடீரென மலைச்சாமி நள்ளிரவில் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.

அதிகாலையில் இதை பார்த்து அவரின் தாயார் அழகம்மாள் கதறி அழுதார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த துயர சம்பவத்தை கேட்ட கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். மலைச்சாமிக்கு பாண்டிச்செல்வி, பஞ்சவர்ணம் என்ற 2 சகோதரிகள் உள்ளனர்.


Next Story