கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்,
வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு வேதாரண்யம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் கோவில்களில் தரிசன கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வேதபிரசாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அகில பாரதீய மீனவர் பேரவை மாநில அமைப்புச் செயலாளர் பொன்னியின் செல்வன் உள்பட வேதாரண்யம் நகர மற்றும் தலைஞாயிறு ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதேபோல சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி நிர்வாகிகள் நாகராஜ், செல்வம், அருணாச்சலம், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகி சதானந்தம், இந்து முன்னணி பேச்சாளர் ராஜானந்தம், பா.ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆலயங்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறையினர் வெளியேற வேண்டும், கொள்ளை போன சாமி சிலைகள் மற்றும் சொத்துக்களை மீட்க வேண்டும். கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Related Tags :
Next Story