பொறியியல் படிப்பில் ‘நீட்’ தேர்வை திணிக்க கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் செயல்: பொறியியல் படிப்பில் ‘நீட்’ தேர்வை திணிக்க கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடு தழுவிய அளவில் பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்தும் திட்டம் கைவிடப்படவில்லை என்றும், இதுதொடர்பாக மாநில அரசுகளை வலியுறுத்தப் போவதாகவும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே கூறியிருக்கிறார்.
பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டால், அது மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின்படிதான் நடத்தப்படும். இது மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் பொறியியல் கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும்.
நீட் தேர்வு குறித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில்கூட, ‘நாம் முடிந்த அளவு நீட் தேர்வை எதிர்க்கிறோம். மத்திய அரசுடன் கடுமையாக வாதிடுகிறோம். கடைசியில் வேறு வழியின்றி நடத்தத் தான் வேண்டியிருக்கிறது’, என்று கூறி தமது இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டால் அது சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் செயலாக அமையும். இதைக் கருத்தில் கொண்டு பொறியியல் படிப்பில் நீட் தேர்வை திணிக்கக் கூடாது என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மாநில உரிமைகளைப் பறிக்கும் பொறியியல் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story