8 வழி பசுமை சாலைக்காக கையகப்படுத்தப்படும் மரங்களின் எண்ணிக்கைகள் குறித்து ‘ஹெலிகேமரா’ மூலம் ஆய்வு


8 வழி பசுமை சாலைக்காக கையகப்படுத்தப்படும் மரங்களின் எண்ணிக்கைகள் குறித்து ‘ஹெலிகேமரா’ மூலம் ஆய்வு
x
தினத்தந்தி 30 July 2018 3:45 AM IST (Updated: 30 July 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

8 வழி பசுமை சாலைக் காக கையகப்படுத்தப்படும் மரங்களின் எண்ணிக்கைகள் குறித்து ‘ஹெலிகேமரா’ மூலம் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

அரூர்,

சேலம்-சென்னை இடையே தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நிலம், வீடுகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து வருவாய்த்துறை சார்பில் விவசாயிகளின் நிலம், தென்னை மற்றும் கிணறு, ஆழ்துளை கிணறு உள்ளிட்டவைகளும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் கொக்கராப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரை இருளப்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ‘ஹெலிகேமரா’ மூலம் கடந்த சில நாட்களாக நிலம், மரங்கள், கிணறுகள் கணக்கெடுக்கும் பணி முடிவடைந்தது.

இந்த நிலையில், அரூர் தாலுகாவில் 8 வழி பசுமை சாலை அமையவுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை ‘ஹெலிகேமரா’ மூலம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மாலகபாடி, லிங்காபுரம், சுமைதாங்கிமேடு உள்ளிட்ட இடங்களில் பசுமை சாலைக்கு கையகப்படுத்தப்படும் மரங்கள், கிணறுகளின் எண்ணிக்கைகள் குறித்து ஆய்வு பணி நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் இந்த பணியை மேற்கொண்டனர். 

Next Story