பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலக்கோடு,
பா.ஜ.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சிவா, சிறுபான்மை அணி ஒன்றிய தலைவர் அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அகோரம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர என்னேகொள்கால்வாய் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலக்கோடு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். ஒகேனக்கல் உபரி நீரை அனைத்து ஏரிகளுக்கும் கூட்டு குடிநீர் திட்ட குழாய் மூலமாக கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story