அண்ணன் - தம்பிக்கு சரமாரி அரிவாள் வெட்டு 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
தளி அருகே பஞ்சாயத்து பேசி விட்டு திரும்பிய அண்ணன் - தம்பி 2 பேருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்களை வெட்டிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி குதிரைப்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன்கள் ரத்தினகுமார் (வயது 32), காளிதாஸ் (28). கொடியாளம் கிராமத்தில் இவர்களின் மாமா குள்ளப்பா உள்ளார். அவரது மகன் ராஜ்குமாருக்கும், ஆனேக்கல்லை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் ஆகி அவர்களுக்குள் பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆனேக்கல் போலீசில் பெண் தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ரத்தினகுமாரும், காளிதாசும் நேற்று கொடியாளம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ரத்தினகுமாரும், காளிதாசும், தனது மாமா குள்ளப்பா தரப்பிற்கு ஆதரவாக பேசினார்கள்.
இதன் பிறகு ரத்தினகுமாரும், காளிதாசும், மோட்டார்சைக்கிளில் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் தளி அருகே மதகொண்டப்பள்ளி பக்கமாக வந்த போது பின்னால் அவர்களை 6 பேர் கொண்ட கும்பல் மோட்டார்சைக்கிளில் துரத்தி வந்தது. அவர்கள் ரத்தினகுமாரையும் காளிதாசையும் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அதில் ரத்தினகுமர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காளிதாஸ் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பெண் வீட்டை சேர்ந்த சிலர் 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தளி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story