பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை: பந்தநல்லூர் மண்ணியாற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி பந்தநல்லூர் மண்ணியாற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பனந்தாள்,
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே பந்தநல்லூரில் மண்ணியாறு செல்கிறது. கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத்தெரு காவிரி ஆற்றில் இருந்து பிரியும் இந்த ஆற்றின் மூலமாக 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
திருப்பனந்தாள் ஒன்றிய பகுதிகளில் மட்டும் 6 ஆயிரம் விளை நிலங்கள் மண்ணியாற்றின் மூலம் பாசன வசதி பெறுகிறது. நாகை மாவட்டம் சீர்காழி பகுதியிலும் மண்ணியாற்றில் வரும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் நடக்கிறது.
மண்ணியாற்றில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால்களில் மதகு கட்டும் பணி காரணமாக ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. மேட்டூர், கல்லணை திறந்து விடப்பட்டு காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் மண்ணியாற்றில் கட்டுமான பணிகளை நிறுத்தி பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பந்தநல்லூரில் விவசாயிகள் மண்ணியாற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விவசாய சங்க தலைவர் சங்கர், செயலாளர் முத்துசாமி, பொருளாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் ஞானம்பிள்ளை, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தண்ணீர் திறந்து விடவில்லை எனில் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story