நாமக்கல்லில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிலம்பம் போட்டி மாநில போட்டிக்கு 44 பேர் தேர்வு
நாமக்கல்லில் நேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் வெற்றிபெற்ற 44 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
நாமக்கல்,
தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்கம் ஆகியவை இணைந்து நேற்று நாமக்கல் செல்வம் என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியை நடத்தின.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 10 வயதுக்கு மேல் 17 வயதுக்கு உட்பட்ட சுமார் 700 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஜூனியர், சப்-ஜூனியர், சீனியர் என 3 பிரிவாக தனித்திறமை மற்றும் தொடுமுறை வகைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிக்கு தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் மாநில தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் பொன்.ராமர் முன்னிலை வகித்தார். நாமக்கல் ராமகிருஷ்ணா ஆசிரமத்தின் தலைவர் சுவாமி சேவானந்த மகராஜ் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில் நாமக்கல் மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்க தலைவர் விஜி என்கிற விஜயகுமார், செயலாளர் கார்த்திகேயன், துணை தலைவர் சண்முகம், போட்டி இயக்குனர் சீனிவாசன், கல்லூரி முதல்வர் நடராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்களில் 44 வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story