மெதூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
மெதூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி,
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மெதூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் அடங்கியது காவல்பட்டி மற்றும் கல்மேடு கிராமம். இங்குள்ள பொன்னேரி- பழவேற்காடு நெடுஞ்சாலையையொட்டி ஊராட்சிக்கு சொந்தமான 8 ஏக்கர் 11 சென்ட் நிலம், பொதுப்பணித்துறையின் 2 ஏக்கர் 45 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஊராட்சியின் சார்பில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்த ஊராட்சியின் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு ரூ.8 லட்சத்து 59 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணிகளை தொடங்க சென்றபோது அந்த நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதால் ஊராட்சி வளர்ச்சி பணிகள் செய்ய முடியாமல் உள்ளது. மேலும் தேசிய ஊரக வேலை திட்டப்பணி நடைபெறவில்லை என்பதால் ஏழை எளியோர் வேலை இல்லாமல் அவதிப்படும் நிலை உருவாகி உள்ளது.
இதனை தவிர்த்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஊராட்சி மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story