மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி


மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 30 July 2018 3:36 AM IST (Updated: 30 July 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அருகே சாலையோர மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

வடக்கன்குளம்,



நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள செட்டிக்குளத்தை சேர்ந்தவர் ஜான்சன் மகன் ஜெபநிக்சன் (வயது 23). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு, வேலை தேடி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ராஜசேகர் (28).

இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த பணியில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று அதிகாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் கூடங்குளத்துக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். ஜெபநிக்சன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.


கூடங்குளம் அருகே உள்ள பஞ்சல் விலக்கு பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி, சாலையோர மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஜெபநிக்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜசேகர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பழவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

படுகாயம் அடைந்த ராஜசேகரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் இறந்த ஜெபநிக்சனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story