ஏவுகணை தாக்குதலில் இருந்து மும்பை நகரத்துக்கு பாதுகாப்பு அரண்


ஏவுகணை தாக்குதலில் இருந்து மும்பை நகரத்துக்கு பாதுகாப்பு அரண்
x
தினத்தந்தி 30 July 2018 5:54 AM IST (Updated: 30 July 2018 5:54 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகள் அச்சுறுத்தலால், நாட்டின் பாதுகாப்புக்கு சவால்கள் உருவெடுத்தவண்ணம் உள்ளன.

மும்பை,

சில வெளிநாடுகள், ஏவுகணையால் தாக்கினாலும் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு வான் பாதுகாப்பு அரண்களை உருவாக்கி வருகின்றன. வாஷிங்டன், மாஸ்கோ போன்ற நகரங்களில் இதுபோன்ற பாதுகாப்பு அரண் உள்ளது.

அதுபோல், இந்தியாவில் டெல்லி, மும்பை உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களிலும் வான்மண்டலத்தை பாதுகாக்க வான் பாதுகாப்பு அரண் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அமெரிக்கா, ரஷியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வான் பாதுகாப்பு அரண் அமைப்புகளை இந்தியா கொள்முதல் செய்கிறது. அத்துடன், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஏவுகணைகளையும் பாதுகாப்புக்கு பயன்படுத்துகிறது.

இந்தியாவுக்கு 22 கடல் பாதுகாப்பு குட்டி விமானங்களை விற்பதற்கு அமெரிக்கா ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.

தரையில் இருந்து விண்ணை நோக்கி பாயும் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தையும் அமெரிக்காவிடம் இருந்து பெற முயன்று வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி 5’ ஏவுகணைகளை தனது வான் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிக்கு பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த ஏவுகணை, 5 ஆயிரம் கி.மீ. பாய்ந்து சென்று தாக்கவல்லது. 

Next Story