7-ம் வகுப்பு மாணவன் தற்கொலை சாவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என எழுதிய கடிதம் சிக்கியது
க.பரமத்தியில் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதில் தனது சாவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என எழுதிய கடிதம் சிக்கியது.
கரூர்,
கரூர் மாவட்டம், க.பரமத்தி பெரியார்நகரை சேர்ந்தவர் சுரேஷ். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி ரேவதி. இவர்களுடைய மகன் அருள்பிரகாசம்(வயது 12) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த அருள்பிரகாசம் மனமுடைந்து காணப்பட்டார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற சுரேஷ், ரேவதி ஆகியோர் பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது தங்களது மகன் பிணமாக இருந்ததை கண்டு கதறி துடித்தனர்.
இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு க.பரமத்தி போலீசார் விரைந்து வந்து அருள்பிரகாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, சாவதற்கு முன்பாக அருள்பிரகாசம் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.
அதில் தனது சாவுக்கு அந்த பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தான் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே அரவக்குறிச்சி தாசில்தார் பிரபு, க.பரமத்தி வருவாய் ஆய்வாளர் கணேசன் ஆகிய அதிகாரிகள் அந்த பள்ளிக்கு நேரில் சென்று மாணவன் அருள்பிரகாசை ஆசிரியர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டும் வகையில் திட்டினார்களா?, அடித்து துன்புறுத்தினார்களா? என்பது குறித்து விசாரித்தனர்.
மேலும் மாணவன் அருள் பிரகாசம் கபடி விளையாடு வதில் ஆர்வமுடையவனாக இருந்தான். அந்த வகையில் விளையாடும் போது தகராறு ஏதும் ஏற்பட்டு அதில் மாணவன் மனமுடைந்தானா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே எனது மகனின் சாவுக்கான காரணம் என்ன? என்பது பற்றிய உண்மை நிலையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரசு பள்ளியில் விசாரணை மேற்கொண்ட போது, விளையாட்டின் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு பெற்றோரை அழைத்து வருமாறு தான் அருள்பிரகாசை அறிவுறுத்தினோம். ஆனால் திடீரென அவன் தற்கொலை செய்தது எதிர்பாராமல் நடந்தது என பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்பிரகாசின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story