குட்டையில் அனுமதியின்றி மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை
திருவாரூர் அருகே குட்டையில் அனுமதியின்றி மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவாரூர்,
திருக்காரவாசல் அருகே உள்ள கோமல் ராதாநஞ்சை பகுதி கிராம மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர்் மாவட்டம் திருக்கரவாசல் அருகே உள்ள கோமல் ராதாநஞ்சை கிராமத்தில் வசித்து வருகிறோம். இந்த கிராமத்தில் ஊருக்கு பொதுவாக குட்டை உள்ளது. இந்த குட்டையில் இருந்து தனியார் ஒருவர் உரிய அனுமதியின்றி மண் அள்ளி வருகிறார். இதுபற்றி பல முறை அதிகாரியிடம் புகார் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தொடர்ந்து மண் அள்ளப்பட்டு வருகிறது. எனவே குட்டையில் அனுமதியின்றி மண் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story