சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடந்தது
சொத்து வரி உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை,
சொத்து வரி உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட துணை தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சபீக்அகமது, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், தமிழர் உரிமை இயக்க மாவட்ட அமைப்பாளர் சுப்புமகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் முகமதுரபி வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளர் வேலு.குபேந்திரன், தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கட்சியின் பூம்புகார் தொகுதி தலைவர் நிசார்ராஜா, மாவட்ட செயலாளர்கள் ஜியாவுதீன், கமாலுதீன் உள்பட பலர் கலந்து கொண்டு சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் முகமதுயூசுப் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story