கருணாநிதி உடல் நலக்குறைவு: நெல்லையில் தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு


கருணாநிதி உடல் நலக்குறைவு: நெல்லையில் தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 31 July 2018 3:30 AM IST (Updated: 31 July 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் மனவேதனை அடைந்த தி.மு.க. தொண்டர் நெல்லையில் நேற்று தீக்குளித்தார்.

நெல்லை,


நெல்லை பாளையங்கோட்டை மகிழ்ச்சிநகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 50), தி.மு.க. தொண்டர். இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவர்.

தற்போது கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை டி.வி.யில் பார்த்த சங்கர் சோகமாக இருந்து வந்தார். வீட்டில் உள்ளவர்களிடம் எப்போதும் அதுகுறித்து பேசி புலம்பியபடி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் இருந்த சங்கர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் வேதனை தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் மனவேதனை அடைந்த தி.மு.க. தொண்டர் தீக்குளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story